தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு; 03 குழந்தைகள் உள்பட 11 பேர் பலி; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 03 குழந்தைகள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அந்நாட்டில் உள்ள பிரிட்டோரியா நகருக்கு அருகில் சவுல்ஸ் வில்லே டிவுன்ஷிப் பகுதியில் மதுபான விடுதி ஒன்று உள்ளது. இருப்பினும், குறித்த விடுதி உரிய முறையில் உரிமம் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.

திடீரென இந்த விடுதிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத 3 பேர், அங்கு எப்போதும் போல் மதுபானம் அருந்திக் கொண்டு இருந்த நிலையில், யாரும் எதிர்பாராத தருணத்தில் அங்கு அமர்ந்திருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதன்போது  11 பேர் கொல்லப்பட்ட்டுள்ளதோடு, மொத்தம் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த உள்ளூர் போலீசார், உடனடியாக அங்கு விரைந்து, சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் துப்பாக்கிசூடு நடத்திய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

ஆனால்,  இந்த துப்பாக்கிச்சூடு என நடத்தப்பட்டது என்பதற்கான போதிய காரணங்களை போலீசார் வெளியிட மறுத்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

11 people killed in shooting at a bar in South Africa


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->