அடுத்த வாரம் தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. தமிழகத்தில் கொட்டித்தீர்க்கபோகும் மழை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த வாரம் தென்மேற்கு பருவமழை முடியக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது, வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்குவது வழக்கம்.  ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். வங்கக் கடல் மற்றும் தென் இந்தியப் பகுதிகளில் வளி மண்டலத்தின் கீழ் அடுக்கில் வருகிற 26-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை வீசுவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. 

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகுகிறது. எனவே தென் இந்தியப் பகுதிகளில் வருகிற 26-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக பெய்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 33 சென்டிமீட்டர் இயல்பாக பெய்ய வேண்டும். இந்த ஆண்டு 39 சென்டிமீட்டர் பெய்து உள்ளது. இது யல்பை விட அதிகமாகும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

northeast monsoon start on oct 26th


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->