5 மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை.. வெளுத்து வாங்க போகும் மழை.!! - Seithipunal
Seithipunal


கேரளாவில் கடந்த ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவம் மழை தொடங்கியது. பருமழை தொடக்கத்தில் மிதமான மழை பெய்தது. பின்னர் மெது மெதுவாக குறைய தொடங்கியது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கேரளாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், மற்றும் காசக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை  ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும், மலப்புரம்  மாவட்டம் மற்றும் 9 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளா - லட்சத்தீவு - கர்நாடக கடற்கரை பகுதியில் ஜூன் 7-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும், மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karala heavy rain 5 district orange alert


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->