3D தொழில்நுட்பத்தில் உருவாகும் தபால் அலுவலகம்.. ட்விட்டரில் வைரலாகும் வீடியோ..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அல்சூர் பஜார் தபால் நிலையம் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் புதிய கட்டிடம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதற்கு முன்பு பிற கட்டிடங்கள் கட்டியிருந்தாலும் தபால் நிலையங்களை பொருத்தவரை இதுதான் முதல் முறை. இந்த தொழில்நுட்பம் மூலம் வழக்கமான கட்டிட கட்டுமான செலவை விட 30 முதல் 40 சதவீதம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த கட்டிடத்தை 30 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். 3டி தொழில்நுட்பத்தின் மூலம் கட்டப்படும் இந்த திட்டம் வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் அஞ்சல் துறையில் இன்னும் இது போன்ற சில கட்டிடங்களை கட்ட திட்டமிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

3டி அச்சிடப்பட்ட தபால் அலுவலகம் சுமார் 1100 சதுர அடியில் ரூ. 23 லட்சம் கட்டுமான செலவில் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசு கட்டிடம் கட்டுவது பெங்களூர் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைதளமான ட்விட்டரில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Post office created in 3D technology and video viral on twitter


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->