செல்போன் பேட்டரி சீக்கிரமா காலியாகுதா.? இதை பன்னுங்க.. ரொம்ப நேரம் நீடிக்கும்.!
things to do improve the performance of your mobile battery back up
மொபைல் போன்கள் இன்று நம் அனைவருக்கும் ஒரு அத்தியாவசிய தேவையாகி விட்டது. நமது அனைத்து வேலைகளுக்கும் பிரதான பயன்பாடு செல்போன்களின் மூலமாகவே நடைபெறுகிறது.
நாள் முழுவதும் நாம் தொடர்ச்சியாக நமது செல்போன்களை பயன்படுத்துவதால் மற்ற பேட்டரிகளைப் போலவே செல்போன் பேட்டரிகளும் சேதமடைகின்றன.
பொதுவாக ஒரு பேட்டரியின் சராசரி ஆயுட்காலம் 3 முதல் 5 ஆண்டுகள். 500 முதல் 1000 சார்ஜிங் சுழற்சிகள் வரை இருக்க வேண்டும். ஆனால், இன்றைக்கு நாம் ஒரு வரைமுறையின்றி நமது செல்போன்களை பயன்படுத்துவதால் நமது பேட்டரி 3 ஆண்டுகளுக்குள்ளேயே சேதமடைந்து விடுகிறது.
இதனைத் தவிர்த்து எவ்வாறு நமது மொபைல் போன் பேட்டரிகளை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம் என்று பார்ப்போம். நமது மொபைல் போன் சார்ஜ் பொதுவாக 30 சதவீதத்திற்கு கீழே இறங்கினால் உடனடியாக சார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

அதிகபட்சமாக 90% வரை சார்ஜ் செய்ய வேண்டும். மாதத்திற்கு ஒருமுறை 100 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
பெரும்பாலும் 20% கீழ் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி செல்போனை சுவிட்ச் ஆஃப் ஆக விட்டு சார்ஜ் செய்வது பேட்டரியின் திறனை பாதிக்கும்.
மேலும் நாம் பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை எப்போதும் செயலிழக்கம் செய்ய வேண்டும். நமக்கு தேவையில்லாத அப்ளிகேஷன்கள் பேக்கிரவுண்டில் ஓடிக் கொண்டிருந்தால் அவை பேட்டரியின் செயல் திறனை பாதிக்கும்.
எப்பொழுதும், மொபைல் போனை சார்ஜ் செய்யும் போது ஃபிளைட் மோடில் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதன் மூலம் அதிகப்படியான பேட்டரி பயன்பாடு தடைபடுகிறது.
மொபைல் போன் பேட்டரி அதிகமான வெப்பத்திலும், அதிகமான குளிரிலும் அதன் செயல் திறன் பாதிக்கும். எனவே போன் அதிக வெப்பம் உள்ள பகுதிகளிலும், அதிக குளிரான பகுதிகளிலும் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
English Summary
things to do improve the performance of your mobile battery back up