குழந்தை பெத்துக்கவும் ரோபோ வந்தாச்சு... அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய சாதனை.!
robos can deliver babies scientists makes a great achievement in maternity medical field
அமெரிக்காவில் ரோபோவின் மூலம் ஐந்து பெண் குழந்தைகள் பெற்றெடுக்கப்பட்டுள்ள சம்பவம் உலகம் முழுவதிலும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த சம்பவம் மகப்பேறு மருத்துவ உலகில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
தற்காலத்தில் விஞ்ஞான உலகம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியின் காரணமாக கொரோனா போன்ற சிக்கல்கள் சில நேரங்களில் ஏற்பட்டாலும் விஞ்ஞான வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றம் மருத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக அமெரிக்காவின் ரோபோவை பயன்படுத்திய ஐந்து குழந்தைகளை பெற்றெடுக்க செய்திருக்கின்றனர் விஞ்ஞானிகள்.

ப்ளே ஸ்டேஷன் 5 கண்ட்ரோலரை பயன்படுத்தி ஸ்பெர்ம் ரோபோ மூலம் முதல்முறையாக 5 பெண் குழந்தைகள் பெற்றெடுக்கப்பட்டிருக்கின்றன. விந்தணுவை ஊசியின் மூலம் செலுத்தும் ரோபோக்களை ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவைச் சார்ந்த விஞ்ஞானிகள் மேம்படுத்தி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கிளிக்கிற்கு அனுப்பப்பட்டது.
அந்த ரோபோக்களை பயன்படுத்தி விந்தணு செலுத்தப்பட்டு ஐந்து பெண் குழந்தைகள் தற்போது பிறந்து இருக்கின்றன. அந்தக் குழந்தைகள் எவ்வித சிக்கலும் இல்லாமல் நலமுடன் இருக்கிறன. மகப்பேறு மருத்துவ உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஐவிஎஃப் எனப்படும் செயற்கை கருத்தரித்தலுக்கான செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
robos can deliver babies scientists makes a great achievement in maternity medical field