இனி மெசேஜ்களைத் தேடி அலைய வேண்டாம்...! - வாட்ஸ்அப்பில் வந்த புதிய அப்டேட் என்ன தெரியுமா...?
No more searching messages Do you know what new update WhatsApp
இன்றைய டிஜிட்டல் உலகில் தகவல் பரிமாற்றத்தின் முதன்மை தளமாக வாட்ஸ்அப் உருவெடுத்துள்ளது. குடும்ப உரையாடல்கள், அலுவலக தகவல்கள், பள்ளி குழுக்கள், வணிக தொடர்புகள், வாடிக்கையாளர் தகவல்கள் என அன்றாட வாழ்க்கையின் பெரும்பாலான தகவல் பரிமாற்றங்களும் ஒரே செயலியில் குவிந்து வருவதால், தேவையான உரையாடல்களை உடனடியாக கண்டுபிடிப்பது பலருக்கும் சவாலாக மாறியுள்ளது.இந்த சிக்கலுக்கு தீர்வாக அறிமுகமாகியுள்ளது ‘தனிப்பயன் பட்டியல்’ வசதி.

இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களது உரையாடல்களை குடும்பம், வேலை, நண்பர்கள், வியாபாரம், வாடிக்கையாளர்கள் போன்ற தனித்தனி பிரிவுகளாக ஒழுங்குபடுத்திக் கொள்ள முடியும். இதனால் ஆயிரக்கணக்கான தகவல்களுக்கு நடுவே தேவையான உரையாடலை தேடி நீண்ட நேரம் அலைந்து திரிய வேண்டிய அவசியம் குறைகிறது.
இந்த வசதியை பயன்படுத்த, வாட்ஸ்அப் உரையாடல் பகுதியில் சென்று கீழ்நோக்கி நகர்த்தினால் ‘பட்டியல்’ என்ற தேர்வு தோன்றும். அதில் புதிய பட்டியலை உருவாக்கி, விருப்பமான உரையாடல்களை அதனுடன் இணைக்கலாம். பின்னர் அந்த குறிப்பிட்ட பட்டியலை திறந்தால், அதனுடன் தொடர்புடைய தகவல்கள் மட்டும் தனியாக காட்சியளிக்கும்.
இந்த புதிய வசதி தகவல்களின் எண்ணிக்கையை குறைக்காதபோதிலும், அவற்றை முறையாக பிரித்து காட்டுவதன் மூலம் முக்கியமான உரையாடல்களை உடனடியாக கவனிக்க உதவுகிறது.
அன்றாட தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும் தெளிவாகவும் மாற்றும் பயனுள்ள மேம்பாடாக இந்த அம்சம் பார்க்கப்படுகிறது.
English Summary
No more searching messages Do you know what new update WhatsApp