'தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு வேண்டும்'; பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வையும் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் சபாநாயகரை வாழ்த்திப் பேசிய பிரேமலதா, தமிழ்நாட்டில் இனி நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன், சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய பாமக சட்டமன்ற குழு தலைவர் செளமியா அன்புமணி, நம்பிக்கை வாக்கெடுப்பில் தங்களது நிலைப்பாடு குறித்து கட்சித் தலைமையே முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகள் மூட முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டிருப்பதற்கு அவர் வரவேற்பளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Premalatha Vijayakant requests live telecast of Tamil Nadu Legislative Assembly proceedings


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->