மேடையே பூ கொடுத்து அனைவரையும் வளைத்துப்போட்ட அமலா பால் மகன்! அமலா பால் நெகிழ்ச்சி!
Amala Paul son wowed everyone by giving flowers on stage Amala Paul resilience
நடிகை அமலா பால் சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற “KLF Kinder Tharattazhaku Season 3” என்ற சிறப்பு ஆடை அலங்கார நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தாய்மை மற்றும் கர்ப்பகாலத்தை கொண்டாடும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமலா பால் தனது குட்டி மகன் இலை உடனும் பங்கேற்றது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
ஆனால் அந்த நிகழ்ச்சியில் அனைவரின் மனதையும் கவர்ந்தது அமலா பாலின் மகன் இலை தான். மேடையில் அமைதியாக அமராமல், தனது குறும்புத்தனமான செயல்களால் அரங்கமே சிரிப்பில் மூழ்கும் அளவுக்கு மகிழ்ச்சி பரப்பினார்.
நிகழ்ச்சிக்காக மேடையில் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த பூக்களை ஒன்று ஒன்றாக எடுத்து, அங்கே இருந்த போட்டியாளர்களிடம் சென்று கொடுத்து தனது குழந்தைத்தனமான அன்பை வெளிப்படுத்தினார். இலையின் இந்த இயல்பான செயலை பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி அங்கிருந்தவர்களும் கைதட்டி ரசித்தனர்.
மகனின் குறும்புகளை பார்த்த அமலா பாலும் புன்னகையுடன் ரசித்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோவை பார்த்த நெட்டிசன்கள்,“கெட்டப்பயன் சார் இவன்!”என கிண்டலாகவும், பாசமாகவும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். சிலர் “அம்மாவை விட மகன் தான் இப்போது ஸ்டார்” என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
சினிமா பிரபலங்களின் குழந்தைகள் அடிக்கடி இணையத்தில் வைரலாகுவது புதிதல்ல. ஆனால் எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல், இயல்பான குழந்தைத்தனத்தால் ரசிகர்களை கவர்ந்திருப்பது இலையின் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
நடிகை அமலா பால், தலைவா திரைப்படத்தில் நடித்த போது இயக்குநர் ஏ.எல். விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாயை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அமலா பால் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
English Summary
Amala Paul son wowed everyone by giving flowers on stage Amala Paul resilience