நடிகர் ரஜினியின் மாஸ்டர் பிளான்; மாமனாரின் சப்போர்டுடன் 2031 தேர்தலில் போட்டியிடும் நடிகர் தனுஷ்..?
Actor Dhanush to contest the 2031 election with the backing of actor Rajini
முதல்வர் விஜய் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர். அவர் கட்சி ஆரம்பித்த 02 ஆண்டுகளிலேயே தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று முதல்வராக ஆகியுள்ளார். இந்நிலையில், முதல்வர் விஜய் போலவே, அரசியல் களம் இறங்க ஆசைப்பட்டுள்ள நடிகர் தனுஷ், வரும் 2031-ஆ ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நேரடியாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய விஜய், 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்துள்ளதால் தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக மாறி, மாறி கோலோச்சிய திமுக, அதிமுகவின் செல்வாக்கு குறைந்துள்ளது.
தமிழக அரசியலில் கடந்த காலங்களில் சினிமா துறையில் இருந்து வந்த எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி ஆட்சியை பிடித்தார். ஏன் திமுக முன்னாள் மறந்த முதல்வர் கருணாநிதி அவர்களும் சினிமாவை சார்ந்தவர். அடுத்து மறந்த அதிமுக முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து முதல்வரானவர்தான். திமுக வரிசையில் மு.க. ஸ்டாலின் சினிமாவில் நடித்தவர். உதயநிதி ஸ்டாலின் பல படங்களை தயாரித்துள்ளதோடு, பல படங்களின் நாயகனாவையும் நடித்துள்ளார். தற்போதும் படங்களை தயாரித்து வருகிறார்.

நடிகர்கள் சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் அரசியல் கட்சியை தொடங்கினர். ஆனால், அவர்களால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை. குறிப்பாக கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். ஆனாலும், அவர் அரசியலில் தனித்து வெற்றிப்பெற்றதாக இல்லை. திமுகவில் இணைந்த பிறகுதான் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அதேநேரத்தில், விஜய் தவெகவை தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து முதல்வராகி விட்டதால், நாங்களும் முதல்வர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்திலா..? அல்லது மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் எண்ணத்திலும் மற்ற நடிகர்களும் அரசியலில் களம் இறங்க தயாராகி வருகின்றனர். அதில் மிக முக்கியமாக நடிகர் தனுஷ் புதிய இயக்கம் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதற்காக அவர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை வெட்டவெளிச்சமாக தெரிகிறது. நடிகர் தனுஷை தொடர்ந்து சமீபத்தில், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களுடைய ரசிகர்கள் சந்திப்பை நடத்தியுள்ளனர். ஆனாலும், மற்ற நடிகர்களை விட, தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ள தனுஷ், அதற்கான அனைத்து பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில் ''தமிழக எழுச்சிக் கழகம்'' என்ற பெயரிலான கட்சியை தேர்தல் ஆணையத்தில் தனுஷ் தரப்பு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தனுஷ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

''அரசியல் கட்சி தொடங்கப்போவது உறுதி. ஆனால், இன்னும் கட்சி பெயர் எல்லாம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதுவரை ரசிகர்கள் பொருமையாக காத்திருக்க வேண்டும்.'' என்று கூறப்படுகிறது.
அதேநேரம், நடிகர் தனுஷ் கட்சி தொடங்குவது தொடர்பாக சினிமா வட்டாரத்தில் கசிந்துள்ள தகவல்படி, நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கியிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார் என்றும், ஆனால், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர் கட்சி தொடங்குவதில் இருந்து பின்வாங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், விஜய் கட்சி தொடங்கி அனைத்து எதிர்ப்புகளையும், இருபெரும் கட்சிகளான திமுக - அதிமுகவையும் சமாளித்து, ஏன் கரூர் சம்பவத்தில் இருந்தும் மீண்டெழுந்து மாபெரும் வெற்றி பெற்று அரசியல் களத்தையே மாற்றியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழக தேர்தலில் விஜய்யின் அபார வெற்றியை பார்த்த, ரஜினி தரப்பினர் மற்றும் அவரது ரசிகர்கள் நல்வாய்ப்பை தவறவிட்டு விட்டோமே என்று ஆதங்கத்தில் உள்ளனர். அந்த ஆதங்கத்தை போக்கும் விதமாகவே, தற்போது அந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதற்காக ரஜினியின் மருமகனாக நடிகர் தனுஷ் அரசியல் களம் காண உள்ளார்.
அதாவது, ரஜினியின் மாஸ் பக்கபலத்தோடு தீவிர அரசியலில் தனுஷ் ஈடுப்பளவுள்ளார். விஜய் போலவே கட்சி தொடங்கி, வரும் உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக 2031-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு ரஜினிக்கும், விஜய்க்கும் இடையிலான சினிமா போட்டி என்பது ஒரு விதமான மோதல் போக்கு போல் மாறியிந்தமை நம் அனைவருக்கும் தெரியும். சமூக வலைதளங்களில் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர்.
கடந்த தேர்தலில் விஜய் வெற்றி பெற்ற உடனே, அவருக்கு வாழ்த்துக்கள் கூட கூறாமல் முதலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, ரஜினி நேரில் சந்தித்து பேசியது விமர்சனத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து, அந்த சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம் அளித்தார். ஆனாலும், இருதரப்பினர் இடையே சமூக வலைதளங்களில் மோதல் போக்கு தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது.
சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல்வர் விஜய்யை, அவரது இல்லத்திலும், தலைமைச் செயலகத்திலும் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சிலம்பரசன் உள்ளிட்ட பல்வேறு சினிமா பிரபலங்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், இதுவரை ரஜினி, தனுஷ் ஆகியோர் விஜய்யை சந்திக்கவில்லை.
ஏற்கனவே சினிமா மற்றும் அரசியலில் விஜய்யுடன் உள்ள மோதல் போக்கு, தற்போது புதிதாக அரசியல் கட்சி தொடக்கம் போன்றவைகளால் இருவரும் முதல்வர் விஜய்யை நேரில் சந்திப்பதை தவிர்த்து இருக்கலாம் என்று அவர்கள் தரப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
Actor Dhanush to contest the 2031 election with the backing of actor Rajini