தேர்தல் செலவுக்காக ரூ.31 கோடி செலவு செய்ததாக வெளியான சர்ச்சை வீடியோ; தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா மறுப்பு..! - Seithipunal
Seithipunal


தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமா பேசியதாக சமூகவலைத்தளத்தில் பழைய வீடியோ பதிவு ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

அந்த வீடியோவில் மற்றொரு நபருடன் உரையாடும் சத்யபாமா, ''சென்ற தேர்தலில் நான் ரூ.31 கோடி செலவு செய்தேன். ஆனால், ஒரு பைசா கூட திரும்பி வரவில்லை. எடப்பாடி பத்து பைசா கூட எடுக்க மாட்டார். என்னுடைய நிலைமை இப்போது இங்கு வந்து நிற்கிறது.'' என்று மிகவும் ஆதங்கத்துடன் பேசுவதுபோல் அந்த வீடியோவில் உள்ளது. இடைத்தேர்தல் நாளில் காலையில் இந்த வீடியோ வெளியானதும், அதில் தேர்தல் செலவு குறித்து அவர் பகிரங்கமாகப் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தாராபுரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா, பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த சத்யபாமா கூறியதாவது;

''நான் அந்த மாதிரி எல்லாம் பேசவில்லை. அந்த வீடியோவில் இருப்பது அனைத்துமே சித்தரிக்கப்பட்டது. இந்தக் காணொலியை பரப்பியது யார் என்று தெரியவில்லை. எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதால் இதுபோன்ற வீடியோக்களை பரப்புகிறார்கள். இந்த வீடியோ தேர்தல் வாக்குப்பதிவில் எதிரொலிக்காது.'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dharapuram TVK candidate Sathyabama denies allegations regarding the controversial video about election expenses


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->