ஹைதராபாத் அணியை அடித்து துவைத்த குஜராத் அணி; 89 ரன்களுக்குள் சுருண்ட பரிதாபம்..!
Gujarat bowls out Hyderabad for just 89 runs
2026 ஆண்டுக்கான 19-வது ஐபிஎல் போட்டியின் 56 வது லீக் போட்டி இன்று குஜராத் அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், ஐதராபாத் - குஜராத் அணிகள் மோதின. இன்றைய ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 05 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.
அணியின் சார்பில், கேப்டன் கில் 05, பட்லர் 07, நிஷாந்த் சிந்து 22 ரங்களில் ஆட்டமிழக்க, நிதானமாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் அரை சதம் கடந்து 61 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக, வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜேஸன் ஹோல்டர் 11, தெவாட்டியா 04 என ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஹைதராபாத் அணி சார்பில், பிரபுல், சாகிப் தலா 02 விக்கெட்டுகளையும், கம்மிங்ஸ் 01 விக்கெட்டினையும் வீழ்த்தினர். அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கிட் அணி, 05 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்தது.
169 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி ஆரம்பம் முதலே தட்டு தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் வந்த உடனே பெவிலியன் திரும்பினர். அதிகபட்சமாக அணியின் கேப்டன் கம்மின்ஸ் 19 ரன்களை கடந்தார். இறுதியில் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி படு தோல்வி அடைந்தது.
இந்நிலையில் குஜராத் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குஜராத் அணியில் அதிகபட்சமாக காகிசோ ரபாடா, ஜேசன் ஹோல்டர் தலா 03 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், ரஷீத் கான் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் குஜராத், புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
English Summary
Gujarat bowls out Hyderabad for just 89 runs