2026-ஆம் ஆண்டுக்கான 'ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்' விருது; 15 பேருக்கு விருது வழங்கிய குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு..!
President Droupadi Murmu presented the Florence Nightingale Awards for the year 2026
சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறந்த சேவையாற்றிய செவிலியர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு,விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
அதன் பின்னர் விழாவில் உரையாற்றிய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, கருணை, அர்ப்பணிப்புணர்வு, நாட்டிற்கு சேவையாற்றும் நோக்குடன் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாயளர்களின் விலைமதிப்பற்ற சேவைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த விருதுகள் அமைந்துள்ளன என்று விருது வென்றவர்களை பாராட்டியுள்ளார்.
அத்துடன், சவாலான சூழலில சுகாதார சேவைகளை வழங்குவதில் செவிலியர் முக்கிய பங்காற்றுவதாக குறிப்பிட்டுள்ளதோடு, நோயாளிகளைப் பராமரிப்பதில் உயர்ந்த தரநிலையுடன் அவர்கள் ஆற்றும் அளப்பரிய சேவைகளுக்கும் அயராத முயற்சிகளுக்கும் இந்த விருதைப் பெற்ற அனைவருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
அதேப்போன்று இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டாவும் கலந்துகொண்டார். செவிலியர்களின் சிறந்த சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் 1973-ஆம் ஆண்டில் இந்த தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை வழங்க முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2026-ஆம் ஆண்டிற்கான இந்த தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது மொத்தம் 15 பேருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
President Droupadi Murmu presented the Florence Nightingale Awards for the year 2026