கூலித்தொழிலாளியின் மகளான கல்லூரி மாணவிக்கு ரூ.21 கோடி வருவாயை மறைத்துள்ளதாக வருமான வரித்துறை நோட்டீஸ்..!
Income Tax Department issues notice to poor college student for hiding income of Rs 21 crore
உத்தர பிரதேசத்தின் உன்னாவ் நகர், கிரிராஜ்பேக் பகுதியைச் சேர்ந்தவர் அஜய் சங்கர். தினக்கூலியாகப் பணியாற்றி வரும் இவருடைய மகள் ரேஷ்மி சவீதா. பிஏ பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு ரேஷ்மிக்கு, வருமான வரித் துறை சார்பில் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ரூ.20.98 கோடி வருவாயை மறைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரேஷ்மி, உள்ளூர் வழக்கறிஞர் ஒருவரின் துணையுடன் வருமான வரித் துறை மற்றும் உத்தர பிரதேச காவல் துறையில் புகார் மனுக்களை அளித்துள்ளார். இதுகுறித்து ரேஷ்மி கூறுகையில்,

தனது வாழ்நாளில் இதுவரை ரூ.20,000-ஐ கூட மொத்தமாகப் பார்த்தது கிடையாது என்றும், ஆனால் எனது ஆதார், பான் கார்டை பயன்படுத்தி ரூ.20.98 கோடிக்கு பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன. எனது ஆதார் எண், பான் எண்ணைப் பயன்படுத்தி டெல்லியில் உள்ள ஒரு நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனது ஆவணங்களைப் பயன்படுத்தி டெல்லி புராரி பகுதியில் ஆர்எஸ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் 2025-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி தொடங்கப்பட்டு, கடந்த 2025-ஆம் ஆண்டு மே 09-ஆம் தேதி மூடப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் மோசடிக்காக எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Income Tax Department issues notice to poor college student for hiding income of Rs 21 crore