கிருஷ்ண ஜென்ம பூமி மதுரா கோயிலிலும் காணிக்கை திருட்டா..? விசாரணை நடத்த முதல்வர் யோகிக்கு கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயி​லில் காணிக்கை திருட்டு உறுதி செய்​யப்​பட்​டு பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்​நிலை​யில், உத்தரப் பிரதேசத்தில் மது​ரா​வில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி கோயி​லிலும் காணிக்கை திருட்டு நடந்​துள்​ள​தாக கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் நிலம் மீட்பு தொடர்​பான வழக்​கின் மனுதாரர்​களில் ஒரு​வ​ரான துறவி தினேஷ் பலஹாரி மகா​ராஜ் கூறி​யுள்​ளார்.

அத்துடன், இதுகுறித்து விசா​ரிக்க எஸ்​ஐடி அமைக்க வேண்​டும் என்று முதல்வர் ஆதித்​ய​நாத்​துக்கு கோரிக்கை வைத்​து கடிதம் எழுதியுள்ளார். அதில், கிருஷ்ணர் கோயிலுக்கு காணிக்​கை​யாக ரொக்​கம், தங்​கம், வெள்ளி ஆபரணங்​களைப் பக்​தர்​கள் வழங்கி வரு​கின்​றனர். அதில் முறை​கேடு​கள் நடக்​கின்​றன என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கோயில் நிர்​வாகி கிருஷ்ண ஜென்​மஸ்​தான் சேவா சன்​ஸ்​தான் செய​லா​ளர் கபில் சர்​மா, ரூ.1,000 கோடி மதிப்​புள்ள சொத்​து​களைச் சேர்த்​துள்​ளார் என்றும், எனவே காணிக்கை குறித்து விசா​ரணை நடத்த வேண்​டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், தன் மீதானப் புகாரை கபில் சர்​மா மறுத்துள்ளதோடு, அரசு விசா​ரணைக்கு அறக்​கட்​டளை தயா​ராக இருப்​ப​தாகவும் தெரிவித்துள்​ளார். மதுரா கோயிலை நிர்​வகிக்​கும் கிருஷ்ண ஜென்​மஸ்​தான் சேவா சன்​ஸ்​தானும், கோயில் நிதி முறை​கேடு குறித்து எஸ்​ஐடி விசாரிக்க வேண்​டும் என்று முதல்​வர் ஆதித்​ய​நாத்​துக்கு கடிதம் எழுதியுள்​ளது.

இந்​த சூழலில், உத்​தவ் தலை​மையி​லான சிவசேனா கட்​சி​யைச் சேர்ந்​தவர்​கள், ஜம்மு காஷ்மீர் மாநில கட்​சித் தலை​வர் மணிஷ் சாஹ்னி தலை​மை​யில் நேற்று போராட்​டம் நடத்​தினர். அப்​போது, நான்கு சங்​க​ராச்​சா​ரி​யார்​களின் தலை​மை​யில் 'இந்து பாது​காப்பு வாரி​யம்' அமைக்க வேண்​டும் என்று அவர்​கள் கோரிக்கை விடுத்​துள்ளனர்.

இந்த போராட்​டத்​தின் போது மணிஷ் பேசுகை​யில், ''ராமர் கோயி​லில் காணிக்​கை, நிலப் பரிவர்த்​தனை​யில் முறை​கேடு, மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு வழங்​கப்​பட்ட வெள்​ளி​யின் தரம் குறித்த சர்ச்​சை, திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் லட்டு பிர​சாத விவ​காரம் ஆகியவை லட்​சக்​கணக்​கான பக்​தர்​களின் நம்​பிக்​கையை பா​தித்​துள்​ளது. எனவே, முற்​றி​லும் சுதந்​திர​மான அமைப்பு தேவைப்​படு​வ​தால் அனைத்​து கோயில்​களை​யும்​ அரசே நிர்​வகிக்​க வேண்​டும்​'' என்​று தெரிவித்​துள்ளார்​.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Request to Chief Minister Yogi to conduct an investigation into the theft of offerings at the Krishna Janmabhoomi Mathura temple


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->