வெளியே போகும்போது குடை மறந்திடாதீங்க...! 4 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை...! - வானிலை மையம் அதிரடி எச்சரிக்கை
Dont forget your umbrella when you go out Heavy rain expected 4 districts today Meteorological Department issues warning
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கை தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.
அதேபோல், கடலோர ஆந்திரப் பிரதேசத்திலிருந்து மத்திய மகாராஷ்டிரா வரை, வடக்கு தெலுங்கானா, அதனை ஒட்டிய பகுதிகள் மற்றும் மராத்வாடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தால், சுமார் 3.1 முதல் 4.5 கிலோமீட்டர் உயரம் வரை காற்றழுத்த தாழ்வு பாதை உருவாகியுள்ளது.

இந்த வளிமண்டல மாற்றங்களின் காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பதிவாகக்கூடும்.குறிப்பாக திருப்பத்தூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் பலத்த காற்றும் வீசக்கூடும்.
மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இப்பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த காற்றும் வீச வாய்ப்பு உள்ளது.நாளை தமிழகத்தின் பல இடங்களில் மீண்டும் லேசானது முதல் மிதமான மழை தொடரக்கூடும். குறிப்பாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு நீடிக்கிறது.வரும் ஜூன் 30 முதல் ஜூலை 3 வரை தமிழகத்தின் ஒருசில பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் மழை தொடரும் சூழல் காணப்படுவதாக வானிலை மையம் தெரிவிக்கப்படுகிறது.
வெப்பநிலையைப் பொறுத்தவரை, ஜூலை 1 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Dont forget your umbrella when you go out Heavy rain expected 4 districts today Meteorological Department issues warning