கர்நாடகாவில் அதிர்ச்சி; காதலியை காருக்குள் பெட்ரோல் குண்டுவைத்து கொல்ல முயன்ற காதலன் தீப்பிடித்து மரணம்..!
In Karnataka a lover who tried to kill his girlfriend by throwing a petrol bomb inside her car caught fire and died
கர்நாடகா மாநிலம் உத்தரா கன்னட மாவட்டத்தில் திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலியைக் காருக்குள் பெட்ரோல் குண்டு வைத்து கொல்ல முயன்ற காதலன் காருக்குள் தீப்பிடித்து எரிந்து உயிரிழந்த்துள்ளார்.
உத்தரா கன்னட மாவட்டத்தில் உள்ள அங்கோலாவைச் சேர்ந்த 30 வயதான நாகேந்திரா. அதே ஊரை சேர்ந்த 26 வயதான ரம்யாவை கடந்த 06 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், ரம்யாவுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்ததால் நாகேந்திராவைப் பிரிய முயன்றதாகத் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நாகேந்திரா பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருந்தக ஊழியராக பணியாற்றி வந்த ரம்யாவைச் சந்திப்பதற்காக நேற்று பெங்களூரு சென்றுள்ளார். அங்கு ரம்யாவை சந்தித்த நாகேந்திரா தன்னுடன் சொந்த ஊருக்கு வருமாறு வாடகை காரில் அழைத்து சென்றுள்ளார்.

கார் தும்கூர் மாவட்டத்தில் சிரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது நாகேந்திராவுக்கும் ரம்யாவுக்கும் இடையே காதல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட்டுள்ளது. அப்போது ரம்யா நாகேந்திராவை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற நாகேந்திரா ரம்யாவைக் கத்தியால் தாக்கியுள்ளார். இதனால் ரம்யா ஓடும் காரில் இருந்து கீழே குதித்துள்ளார்.
அப்போது ஓட்டுநர் பிரவீன் காரை நிறுத்தி கீழே இறங்கியுள்ளார். ஆத்திரமடைந்த நாகேந்திரா தன் பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் வெடிகுண்டை ரம்யா மீது வீச முயன்றுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததால் கார் தீப்பிடித்ததில் நாகேந்திரா சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த தும்கூர் போலீசார் காயமடைந்த ரம்யாவையும் ஓட்டுநர் பிரவீனையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர். தற்போது இந்த பெட்ரோல் குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
In Karnataka a lover who tried to kill his girlfriend by throwing a petrol bomb inside her car caught fire and died