காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டி நிகழ்ச்சிகள் நடத்த மத்திய விளையாட்டு அமைச்சகம் ஏற்பாடு..! - Seithipunal
Seithipunal


வரும் 2030 ஆம் ஆண்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இந்திய விளையாட்டு ஆணையம், 'மை பாரத் நாடு' என்ற தழுவிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரங்களில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

அதாவது, நாடு முழுவதும் இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் படைப்பாற்றல் குறித்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், இதன் ஒரு பகுதியாக பங்கேற்பாளர்கள் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் 2030-க்கான ஜோதி வடிவமைப்பு போட்டி, ரீல்ஸ் போட்டி மற்றும் விநாடி-வினா போட்டிகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜோதி வடிவமைப்புப் போட்டியில் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், புதுமை, நிலைத்தன்மை மற்றும் விளையாட்டுத் திறமை போன்ற அம்சங்களை உள்ளடக்கிய வகையில் ஜோதியை உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

அத்துடன், போட்டியாளர்கள் டிஜிட்டல் அல்லது கைகளால் வரையப்பட்ட தங்களது படைப்புகளுடன் அதுகுறித்த குறிப்புகளை 200 வார்த்தைகளுக்கு மிகாமல் குறிப்பிட்டு சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் போட்டி மே 11 முதல் 20 வரை இணையவழியில் நடத்தப்படும் என்றும், ஒவ்வொரு போட்டியாளரும் ஒரே ஒரு படைப்பை மட்டுமே சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ஃபிட் இந்தியா பரிசுப் பெட்டிகளும், அங்கீகார சான்றிதழும் வழங்கப்படும் என்றும், தகுதிப்பெற்ற பங்கேற்பாளர்களுக்கு டிஜிட்டல் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக காமன்வெல்த் விளையாட்டு ரீல் போட்டி நடத்தப்படுகிறது. நாட்டில் வளர்ந்து வரும் விளையாட்டு கலாச்சாரம், உள்ளூர் விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டமைப்பு, உடற்தகுதி மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்துவதன் உற்சாகத்தை வெளிப்படுத்துவது போன்ற அம்சங்களில் தனித்துவ ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்கி, 60 விநாடிகளுக்கு மிகாமல் வீடியோ உருவாக்கி சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Union Ministry of Sports has organized awareness programs across the country concerning the Commonwealth Games


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->