மகளின் சாதனையால் நெகிழ்ந்த நடிகை ரோஜா..! அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பெருமை சேர்த்த அன்ஷுமாலிகா - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் செம்பருத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகை ரோஜா. அதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆர்.கே. செல்வமணியுடன் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மலர்ந்து, இருவரும் கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திரைத்துறையிலும், அரசியலிலும் பிஸியாக செயல்பட்டு வரும் இந்த தம்பதிக்கு அன்ஷுமாலிகா என்ற மகளும், கிருஷ்ணா லோகித் என்ற மகனும் உள்ளனர். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக கலக்கி வரும் ரோஜா, குடும்ப நிகழ்வுகளையும் ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், இந்த ஆண்டின் அன்னையர் தினம் ரோஜாவுக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான நாளாக மாறியுள்ளது. அவரது மகள் அன்ஷுமாலிகா, அமெரிக்காவின் புகழ்பெற்ற Indiana University Bloomington பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் (Computer Science Honors) துறையில் இளங்கலை பட்டத்தை சிறப்பாக முடித்துள்ளார்.

இதுகுறித்து ரோஜா தனது சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு வெளியிட்டுள்ளார். அதில்,“இந்த அன்னையர் தினம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது. என் மகள் மிக உயர்ந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றுள்ளார். இது ஒரு தாயாக எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை”என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அன்ஷுமாலிகா இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் ஒரு முக்கிய சாதனையையும் படைத்துள்ளார். இந்தியானா பல்கலைக்கழகத்தின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான Herman B Wells Distinguished Senior Award அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கல்வித் திறன் மற்றும் தலைமைத்துவ பண்புகளுக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெறும் முதல் இந்திய மாணவி என்ற பெருமையையும் அன்ஷுமாலிகா பெற்றுள்ளார்.

சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகள் பெரும்பாலும் திரைத்துறையை தேர்வு செய்யும் சூழலில், ரோஜாவின் மகள் கல்வித்துறையில் சர்வதேச அளவில் சாதித்திருப்பது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Roja is moved by her daughter achievement Anshu Malika made American University proud


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->