வாட்ஸ்அப்பில் அசத்தல் அப்டேட்.. க்ரூப் அட்மின்களுக்கு கூடுதல் வசதி.! - Seithipunal
Seithipunal


அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, வாட்ஸ்அப் செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள் மற்றும் முக்கியமான தகவல்களை  பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர்.

இந்த நிலையில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் தங்களின் பயனார்களுக்கு அடுத்தடுத்து புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. அதன்படி வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு கூடுதல் வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. வாட்ஸ்அப் குரூப்பில் புதிய நபர்கள் இணைவதை அனுமதிப்பது, பயனர்கள் பொதுவாக இருக்கும் குரூப் பக்கங்களை காண்பது போன்ற போன்ற அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, காண்டாக்ட்டில் உள்ள பெயரை கிளிக் செய்தால் அவர் எந்த குரூப்பில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும். மேலும், குரூப்பில் யார் இணைய வேண்டும் என்பதை அட்மின்கள் தான் தீர்மானிக்க முடியும். மேலும் குரூப் லிங்க் வைத்திருந்தாலும் கூட குரூப் அட்மின் அனுமதித்த பிறகே குரூப்பில் இணைய முடியும் போன்ற புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New update for WhatsApp group admins


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->