மறைந்து வரும் நீராதாரம் செவ்வாய் கிரக ஆய்வறிக்கையில் தகவல்.! - Seithipunal
Seithipunal


செவ்வாய் கிரகம் தன்னிடம் இருக்கும் தண்ணீரை வேகமாக இழந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆய்வை நடத்தி வரும் பிரான்சின் சி.என்.ஆர்.எஸ் எனப்படும் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிக்கையில், செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் உள்ள வளிமண்டலத்தில் இருக்கும் நீருக்கான மூலக்கூறுகள் படிப்படியாக குறைந்து வருவதாகத் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீருக்கான வேதியியல் மூலக்கூறுகளை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்களாக சூரிய ஒளி பிரித்துவிடுவதாகவும், செவ்வாய் கிரகத்தின் பலவீனமான ஈர்ப்பு விசைகளால் வேகமாக ஆவியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் 80 கிலோ மீட்டர் உயரத்தில் நீராவி இருந்ததாகவும், எதிர்பார்த்ததை விட அதிக வேகத்தில் நீராவி தற்போது குறைந்து வருவதாக வெளியான சி.என்.ஆர்.எஸ் வெளியிட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new information about mars research


கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
Seithipunal