போன் ரொம்ப ஹாங் ஆகுதா? போனில் இந்த 5 செட்டிங்ஸ மாத்துங்க.. போன் வேகமாவும், பாதுகாப்பாகவும் இருக்கும்! - Seithipunal
Seithipunal


புதிய ஸ்மார்ட்போனை கையில் எடுக்கும் போது, பலர் முதலில் கேமராவைச் சோதிப்பதோ, செயலிகளை பதிவிறக்குவதோ செய்து விடுவார்கள். ஆனால், நிபுணர்கள் கூறுவதாவது – புதிய போன் வாங்கியவுடன் முதலில் கவனம் செலுத்த வேண்டியது பாதுகாப்பு அமைப்புகளில்தான்.

முதலாவதாக, வலுவான பாஸ்வேர்ட், பேட்டர்ன் அல்லது பின் நம்பர் ஒன்றை அமைக்க வேண்டும். எளிதில் ஊகிக்க முடியாத எண்கள் மற்றும் எழுத்துக்கள் பயன்படுத்தப்பட வேண்டும். அதோடு, கைரேகை சென்சார் அல்லது முக அங்கீகாரம் (Face Unlock) போன்ற பயோமெட்ரிக் பாதுகாப்புகளையும் உடனடியாக ஆக்டிவேட் செய்வது, போன் தொலைந்தாலும் அல்லது திருடப்பட்டாலும், அதில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் தவறான கைகளுக்குச் செல்லாமல் பாதுகாக்கும்.

அடுத்ததாக, பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் நிறுவப்பட்டிருக்கும் தேவையற்ற பில்ட்இன் செயலிகளை (Bloatware) நீக்குவது அவசியம். இவை சேமிப்பு இடத்தை வீணடிப்பதோடு, போன் வேகத்தையும் குறைக்கும். மேலும், புதிய செயலிகளை இன்ஸ்டால் செய்யும் போது அவற்றுக்கு தேவையான அனுமதிகள் (Permissions) மட்டுமே வழங்கப்பட வேண்டும். உதாரணமாக, ஒரு கால்குலேட்டர் செயலி தொடர்புகள் அல்லது கேமரா அனுமதி கேட்பது சந்தேகத்திற்குரியது. எனவே, தேவையற்ற அனுமதிகளைத் தடுத்து, தனியுரிமையைப் பாதுகாப்பது முக்கியம்.

மேலும், வங்கி செயலிகள் மற்றும் சமூக வலைதள அக்கவுண்ட்களில் உள்நுழையும்போது, டூ-ஃபேக்டர் ஆதென்டிகேஷன் (2FA) அமைக்கப்பட வேண்டும். இந்த அம்சம், பாஸ்வேர்ட் தெரிந்தாலும், போனுக்கு வரும் ஒடிபி அல்லது தனிப்பட்ட குறியீடு இல்லாமல் யாரும் அக்கவுண்ட்டை அணுக முடியாதபடி தடுக்கும்.

அதேபோல், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வெளியிடும் மென்பொருள் அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு பேட்ச்கள் மிக முக்கியமானவை. இவை செயல்திறனை மேம்படுத்துவதோடு, ஹேக்கர்கள் பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பு குறைபாடுகளையும் அடைக்கின்றன. எனவே, சிஸ்டம் அப்டேட்களையும், ஆப் அப்டேட்களையும் தானாகவே நிறுவும் வசதியைச் செயல்படுத்துவது நல்லது.

இத்துடன், போனுக்கு உடனடியாக ஒரு நல்ல பாதுகாப்பு கவர் (Case) மற்றும் டெம்பெர்ட் கிளாஸ் (Screen Guard) வாங்குவது அவசியம். போன் தவறி விழுந்து சேதமடையும் அபாயத்திலிருந்து காப்பதற்கும், அதிக செலவான பழுதுபார்ப்பைத் தவிர்ப்பதற்கும் இவை உதவும். வல்லுநர்கள் கூறுவதாவது – புதிய போனை முழுமையாக சார்ஜ் செய்த பிறகு பயன்படுத்தத் தொடங்கினால், அதன் பேட்டரி ஆயுள் நீடிக்கும் என்றும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is your phone freezing a lot Change these 5 settings on your phone Your phone will be faster and more secure


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->