வேணாம்.. வேணாம்!கையில குடுங்க..!அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்த அமைச்சர் TRB ராஜாவின் மகன்! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை அருகே ஆவராங்குடிப்பட்டியில் நடைபெற்ற 51-வது தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஜூலை 23ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கம் இணைந்து இந்த போட்டியை நடத்தி வருகின்றன.

டபுள் டிராப், ஸ்கீட், டிராப் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டிகளில், மாநிலம் முழுவதிலிருந்தும் 250-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். கடந்த இரண்டு வாரங்களாக நடந்த இந்த ஆட்டங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். போட்டிகளில் வென்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் வழங்கப்பட்டன. வழக்கம்போல ஒவ்வொருவருக்கும் அண்ணாமலை பதக்கங்களை கழுத்தில் அணிவித்து கௌரவித்தார்.

ஆனால், இந்த நிகழ்ச்சியில் நடந்த ஒரு சிறிய சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் பேசுபொருளாக மாறியுள்ளது. திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் மகன் சூரிய ராஜாபாலு விருது பெற வந்தபோது, அண்ணாமலை அவர் கழுத்தில் பதக்கத்தை அணிய முற்பட்டார். ஆனால் சூரிய ராஜாபாலு, "இல்லை, கையிலேயே கொடுங்கள்" என்றபடி மறுத்துவிட்டார். அண்ணாமலை தொடர்ந்து பதக்கத்தை கழுத்தில் அணிய முயன்றும், சூரிய ராஜாபாலு அவரது கையை பிடித்து தடுத்தார். இறுதியில் அண்ணாமலை கையிலேயே பதக்கத்தை கொடுத்து விட்டார். அந்த தருணம் காமிராவில் பதிவு செய்யப்பட்டு தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இதற்கு முன், புதுக்கோட்டைக்கு வந்த அண்ணாமலைக்கு பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் கட்டியாவயலில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அண்ணாமலை துப்பாக்கிச் சுடும் தளத்திற்குச் சென்று, தானும் சுட்டுப் பார்த்தார். இலக்கை நோக்கி ஐந்து முறை துப்பாக்கிச் சுட்டும் அனுபவத்தை பெற்றார்.

அதன் பின் உரையாற்றிய அண்ணாமலை,"ராஜா ராஜகோபால தொண்டைமான் தனது சொந்த இடத்தில் துப்பாக்கிச் சுடும் தளத்தை அமைத்து, பயிற்சிகளும் போட்டிகளும் நடத்தி வருவது பெரும் சிறப்பு. இங்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வமாக பங்கேற்கின்றனர். விளையாட்டுடன் படிப்பிலும் சிறந்து விளங்க வேண்டும்," என தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Put it in your hand Minister TRB Raja son refused to accept the medal from Annamalai


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->