முதலீட்டை ஈர்க்க திட்டம்..ஜெர்மனி புறப்படுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 30-ந்தேதி ஜெர்மனி செல்கிறார்.30-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி புறப்படுகிறார்.


தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.சிங்கப்பூர் பயணம் என பல்வேறு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் தமிழகத்தில் தொழில் மாநாடு நடத்தினர்,இந்தநிலையில் வருகிற 30-ந்தேதி  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி செல்கிறார். அவரது பயண விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் 30-ந் தேதி காலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி புறப்படுகிறார். 31-ந் தேதி அங்கு ஜெர்மனி அயலக அணி நிர்வாகிகளை சந்திக்கிறார். அதனை தொடர்ந்து செப்டம்பர் 1-ந் தேதி ஜெர்மனியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்று அங்கு 2 அல்லது 3-ந் தேதியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், தொழில் முனைவோ-ரை சந்தித்து உரையாடுகிறார்.

அதனை தொடர்ந்து 4-ந் தேதியன்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நல வாரியத்துடனான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.இதையடுத்து  6-ந் தேதியில் லண்டனில் உள்ள தமிழர் நல வாரியத்தின் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.இதனை முடித்து கொண்டு  7-ந் தேதி மாலை அங்கிருந்து புறப்படுகிறார். செப்டம்பர் 8-ந் தேதி அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The plan to attract investment Chief Minister MK Stalin departs for Germany


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->