நீங்கா நினைவுகள்! அன்புச் சகோதரர்...!- புகழ்ந்து வாழ்த்திய சரத்குமார்
Memories never fade Dear brother Sarathkumar praised and congratulated
பா.ஜ.க. உறுப்பினரும்,நடிகருமான ''சரத்குமார்'' விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டதாவது,"தமிழ் திரையுலகம் மற்றும் அரசியல் துறையின் சாதனையாளரும், திரைத்துறையில் எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அருமை நண்பருமான புரட்சிக்கலைஞர் கேப்டன் 'விஜயகாந்த்' அவர்களின் பிறந்தநாளில், அவருடன் பயணித்த அற்புதமான நினைவுகளையும், எண்ணற்ற தருணங்களையும் நினைவுகூறுகிறேன்.

அன்றாடம் நீங்காத நினைவுகளில் நிறைந்திருக்கும், அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை அவர்தம் பிறந்தநாளில் நினைவுகூர்ந்து மகிழ்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
90 's காலங்களில் திரைத்துறையில் கொடிகட்டி பறந்த இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Memories never fade Dear brother Sarathkumar praised and congratulated