மர்மமுறையில் இறந்த கர்ப்பிணி பெண் - வரதட்சணை தான் காரணமா? பெற்றோர் பரபரப்புக் குற்றச்சாட்டு.!!
two months pregnant lady died in delhi
நாட்டின் தலைநகர் டெல்லியின் துவாரகா பகுதியில் 2 மாத கர்ப்பிணிப் பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் கோமல் வர்ஷா என்ற பெண்ணுக்கும், அமன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவரும் டெல்லியின் படு சராய் பகுதியில் வசித்து வந்தனர். அவர்களுக்கு திருமணமாகி நான்கு மாதங்கள் ஆன நிலையில், வர்ஷா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில், வர்ஷா வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்ததாகவும், அவரை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும் அவரது தந்தைக்கு கடந்த 21-ந்தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்தபோது, வர்ஷா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வர்ஷாவின் மரணத்துக்கான காரணம் இன்னும் சரியாக தெரியாததனால், வர்ஷாவின் கணவர் அமன் மற்றும் அவரது வீட்டார் வரதட்சணை கேட்டு தினமும் வர்ஷாவை அடித்து துன்புறுத்தியதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
வர்ஷாவின் மரணத்துக்கு அவரது கணவன் வீட்டாரே காரணம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வர்ஷாவின் பெற்றோர் அளித்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
two months pregnant lady died in delhi