புதிய சுவையில் உளுந்து சட்னி எப்படி செய்யலாம்?
how to prepare ulunthu satni
தேவையான பொருட்கள்:-
உளுத்தம்பருப்பு
வெங்காயம்
தக்காளி
காய்ந்த மிளகாய்
உப்பு
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள்
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
குறிப்புகள்:-
முதலில் அடுப்பில் வானலை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பிறகு இதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.
இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து ஒரு பவுலில் மாற்றி கொள்ளவும். பின்னர் அடுப்பில் தாளிப்பு கரண்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றவும். அவ்வளவுதான் சுவையான உளுத்தம்பருப்பு சட்னி தயார்.
English Summary
how to prepare ulunthu satni