நான் ஒருநாள் Field Out ஆவேன். அப்போ SKவின் வெற்றியை பார்த்து...?- எமோஷனலான அனிருத்
I field out one day Then after seeing SKs victory emotional Anirudh
பிரபல இயக்குனர் 'ஏ.ஆர்.முருகதாஸ்' இயக்கத்தில் நடிகர் 'சிவகார்த்திகேயன்' நடித்துள்ள படம் 'மதராஸி'. இப்படம் வருகிற 5-ந்தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று,இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் நடிகர்கள், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

அப்போது மேடையில் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் தெரிவித்ததாவது,"என்னுடைய கரியரான இசையில் முதலில் பிளாக்பஸ்டர் திரைப்படமாக உருவானது 'எதிர் நீச்சல்' படம் தான். அந்த திரைப்படத்திலிருந்து சிவகார்த்திகேயனும் எனக்கு இடையேயான நட்பு தொடங்கி மெல்ல மெல்ல நெருக்கமானது.
இப்போ நான் இங்க நிக்குறேன்னா அதுக்கு காரணம் அவர்தான், எஸ்.கே என்னுடைய செல்லம். இது நாங்க சேரும் 9 -வது படம். அவர் மனசு சுத்தமா இருக்கிறதுதான் அவர் இன்னைக்கு இங்க இருக்குறதுக்கு காரணம்.
தொடர்ந்து 50, 100னு இப்போ 300 கோடி வசூல் அடிச்சுட்டாரு.'மதராஸி' படத்துல வேற ஒரு எஸ்.கே.வ நீங்க பார்ப்பீங்க. டிரெய்லர்ல 'இது என் ஊருடா, நான் நிப்பேன்'னு சொல்வாரு.
அது மாதிரி இது என் எஸ்.கே, நான் வந்து நிப்பேன். நானும் எஸ்.கே.வும் சேர்ந்து ஒரே சமயத்துல கரியரை தொடங்கினதுனால அது எனக்கு பர்சனலான மனதுக்கு நெருக்கமான உறவு.
என்னைக்கோ ஒரு நாள் நான் Field Out ஆவேன். அன்னைக்கு எஸ்.கே.வின் வெற்றியை எண்ணி நான் சந்தோஷப்படுவேன்." என்று மிகவும் எமோஷனலாக தெரிவித்தார்.இதனைக் கேட்ட ரசிகர்கள் இருவரின் பிணைப்பைக் கண்டு ஆச்சரியப்படுகின்றனர்.
English Summary
I field out one day Then after seeing SKs victory emotional Anirudh