ரவி மோகன் பங்களாவுக்கு வங்கி நிர்வாகம் நோட்டீஸ்...! காரணம் என்ன?
Notice issued to Ravi Mohans bungalow What reason
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரவி மோகன் தற்போது 'கராத்தே பாபு மற்றும் பராசக்தி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, இவர் 'ரவி மோகன் ஸ்டூடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார்.இந்த நிறுவன பணிகளில் தற்போது தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறார்.

இதனிடையே, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் சொகுசு பங்களா கடந்த 10 மாதமாக EMI கட்டாமல் இருக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது.இதில் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி ரவியுடன் வாழ்ந்து வந்தது அந்த பிரமாண்ட பங்களாவில் தான் என்பது அறிந்தவை.
இவர் EMI கட்டாததால் பங்களாவை ஜப்தி செய்ய வங்கி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. இருப்பினும், அதனை வாங்க ரவி மோகன் தரப்பு மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், இவர் மீது தொடர் குற்றமாக படத்திற்கு ஒப்பந்தம் செய்து ரூ.6 கோடி முன் பணம் வாங்கியும் படத்திற்கு நடித்துக் கொடுக்க வராமல் கால் ஷீட் கொடுக்காமல் இருக்கிறார் என அந்த தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Notice issued to Ravi Mohans bungalow What reason