மைசூரில் காதலி கொடூரகொலை: கள்ளக்காதலன் வாக்குமூலத்தில் உறைந்துபோன போலீசார்..! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் திருமணம் மீறிய உறவில் இருந்த 20 வயது பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த கொலை தொடர்ப்பில் கைது செய்யப்பட்ட பெண்ணின் கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன் போது அவன் கூறியதை தகவலால் போலீசார் அதிர்ந்து போயுள்ளனர். அதாவது, ஹுன்சூர் தாலுகா கெரசனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரக்ஷிதா, 20 வயது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ள நிலையில், கணவர் கேரளாவில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்த சூழலில், பெட்டதபுரா கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜூ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் சலிகிராமா கிராமத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, மோதல் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரத்தில் ரக்ஷிதாவை சித்தராஜூ கொலை செய்துள்ளார்.

பின்னர், அங்கிருந்து தப்பியோட முயன்ற அவனை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து, காவல் நிலத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சித்தராஜூவை போலீசார் கைது செய்தனர். பின்னர் ரக்ஷிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர். மேலும், அவனிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

போலீசார் கூறுகையில், 'சித்தராஜூவுடன் ரக்ஷிதா திருமணம் தாண்டிய உறவில் இருந்து வந்துள்ளார். இருவரும் இடையே எழுந்த சண்டையின் போது ரக்ஷிதாவை கொலை செய்துள்ளார்.அதுவும்,  செல்போன் வெடித்து ரக்ஷிதா உயிரிழந்ததாக கள்ளகாதலன் நாடகமாடியுள்ளார். அதாவது, ரக்ஷிதா வாயில் வெடிமருந்து குச்சிகளை திணித்து வெடிக்க வைத்து கொலை செய்துள்ளார். இதில் அவர் முகம் சிதைந்துபோய் உயிரிழந்துள்ளார். இது தொடர்பான தடயவியல் துறையினருக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police shocked by the confession of the murderer in the brutal murder of a young woman in Mysore


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->