ஏபி டி வில்லியர்ஸ் திடீர் அறிவிப்பு...ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகம்!
AB de Villiers sudden announcement RCB fans are excited
ஐ.பி.எல். தொடரில் ஓய்வு பெற்றாலும் தம்முடைய இதயம் ஆர்சிபி அணி உடன் இருப்பதாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
இந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன்னில் பரபரப்பான இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது.
ஐ.பி.எல். அறிமுகம் ஆன 2008-ம் ஆண்டில் இருந்தே விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் 17 ஆண்டுகளில் ஒரு கோப்பையை கூட வெல்லாதது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இதனால் பல விமர்சனங்களை அந்த அணி மட்டுமின்றி ரசிகர்களும் அடைந்தனர்.
இவை அனைத்திற்கும் 18-வது சீசனோடு ஆர்சிபி அணி கோப்பையை வென்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அத்துடன் கிறிஸ் கெயில், ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரை களத்திற்கு அழைத்த விராட் கோலி கோப்பையை கையில் கொடுத்து வெற்றியை சேர்ந்து கொண்டாடினார்.
இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் ஓய்வு பெற்றாலும் தம்முடைய இதயம் ஆர்சிபி அணி உடன் இருப்பதாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். எனவே வருங்காலத்தில் அந்த அணியுடன் மீண்டும் இணைந்து பயிற்சியாளர், ஆலோசகர் போன்ற ஏதேனும் வேலை செய்து வெற்றிகளில் பங்காற்றத் தயாராக இருப்பதாக அவர் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- ஒருவேளை ஆர்சிபி அணி எனக்கு அங்கே ஏதேனும் ஒரு வேலை (பயிற்சியாளர் அல்லது ஆலோசகர்) இருக்கிறது என்று உணர்ந்தால், என்னுடைய நேரம் சரியாக இருந்தால், அதை நான் செய்யத் தயார். அதற்கு நிச்சயமாக நான் ஆர்சிபி அணியில் இருப்பேன்” என்று கூறினார்.
English Summary
AB de Villiers sudden announcement RCB fans are excited