துக்கச்சேய்தி! உடல் நலக்குறைவால் காலமானார் கேஜிஎப் புகழ் தினேஷ் மங்களூரு...!
Sad news Dinesh KGF fame passes away due to ill health
கன்னட சினிமாவின் பிரபல துணை நடிகர் 'தினேஷ் மங்களூரு'. இவர் 55 வயதில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.மேலும் இவர் மூளைப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு குந்தாபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 5 தினங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை 3.30 மணியளவில் இயற்கை எய்தினார்.

இவரின் மறைவு கன்னட திரையுலகை தற்போது பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவரது மறைவுக்கு திரையுலகினர், சக நடிகர்கள், ரசிகர்கள் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதில் தினேஷின் குடும்பத்தினர் அவரது உடல் நாளை லக்கேரிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும்,தினேஷ் மங்களூர்'கிச்சா', 'கிரிக் பார்ட்டி' , 'ரிக்கி', 'ராணா விக்ரமா', 'ஆ டிங்கி', 'கேஜிஎப்', 'உளிதவரு கண்டந்தே'ஆகிய பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Sad news Dinesh KGF fame passes away due to ill health