சோகம்... படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குனர் உயிரிழப்பு.!  - Seithipunal
Seithipunal


ஹாலிவுட் உதவி இயக்குனர் டியோகோ பொரெல்லா படப்பிடிப்பு தளத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் எமிலி இன் பாரிஸ் என்ற வெப் தொடரின் ஐந்தாவது சீசனுக்கு டியோகோ பொரெல்லா உதவி இயக்குனராகப் பணியாற்றி வந்தார். இந்தத் தொடரின் படப்பிடிப்பு இத்தாலி நாட்டின் வெனிஸில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை வழக்கம் போல் படப்பிடிப்பு நடந்தது. அப்போது மாலை 7 மணியளவில் டியோகோ மாரடைப்பால் மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு படப்பிடிப்பில் இருந்த மருத்துவ ஊழியர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர்களின் முயற்சிகள் பலனளிக்காமல் டியோகோ பரிதாபமாக உயிரிழந்தார். 

படப்பிடிப்பின்போது உதவி இயக்குனர் மரணமடைந்த சம்பவம் பெரும் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து திரையுலகினர் பலரும் டியோகோவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியும், இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

assistant director diego borella died in shooting spot


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->