வானில் தென்பட்ட பிறை.. தமிழகத்தில் 5-ந்தேதி மிலாடி நபி விழா - தலைமை காஜி அறிவிப்பு.!! 
                                    
                                    
                                   coming septamber 5 miladi nabi celebration in tamilnadu 
 
                                 
                               
                                
                                      
                                            மிலாடி நபி விழா வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமை காஜி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய மக்களின் புனிதப் பண்டிகைளில் ஒன்று மிலாடி நபி. அதாவது, இறை தூதர் முகமது நபியின் பிறந்த நாளை இஸ்லாமியர்கள் "மிலாதுன் நபி" என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம் இஸ்லாமியர்கள் புனித நூலான குரானை வாசிப்பதை முக்கியமான கடமையாக கடைபிடித்து வருகின்றனர்.
மேலும், ஏழை மக்களுக்கு உணவு, உடைகளையும் தானமாக வழங்குவார்கள். இந்த நிலையில், இந்த ஆண்டு மிலாடி நபி விழா வருகிற 5-ந்தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாத பிறை நேற்று தமிழகத்தில் தென்பட்டது. எனவே மிலாடி நபி விழா வருகிற 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       coming septamber 5 miladi nabi celebration in tamilnadu