என்னால முடில! மான் கராத்தே படத்தப்போ என்ன வச்சு செஞ்சாங்க... But இப்போ...? - சிவகார்த்திகேயன்
What did they do when maan karathe But now Sivakarthikeyan
தமிழ் திரையுலகில் தற்போது அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் முன்னணி நடிகராகவும் தனது வெற்றியை கொண்டாடி வருகிறார்.தற்போது பிரபல தமிழ்திரையுலக இயக்குனர் 'ஏ.ஆர். முருகதாஸ்' இயக்கத்தில் தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடித்துள்ளார். மேலும்,பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர், விக்ராந்த், வித்யூத் ஜம்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.இசைக்கு அனிருத்.இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், நேற்று 'மதராஸி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்த உரை ரசிகர்கள் மத்தியில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
சிவகார்த்திகேயன்:
அப்போது அவர் தெரிவித்ததாவது," 'மான் கராத்தே' பட ஆடியோ வெளியீட்டு விழாவில், நான் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஷங்கர் படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று சொன்னபோது டிரோல் செய்யப்பட்டேன். இன்று நான் முருகதாஸின் ''மதராஸி'' படத்தில் நடித்துள்ளேன்.
என்னை இங்கு அழைத்து வந்த அனைத்து ரசிகர்களின் ஆதரவிற்கும் நன்றி" என்று தெரிவித்தார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் அனிருத், ருக்மணி வசந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
What did they do when maan karathe But now Sivakarthikeyan