நான் குட்டி தளபதியும் கிடையாது..திடீர் தளபதியும் கிடையாது...அண்ணன் அண்ணன்தான்..தம்பி தம்பிதான்..!விஜய் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மதராஸி’. இதில் ருக்மினி வசந்த, விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் பணியாற்றியுள்ள இந்த படம், ரசிகர்களால் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ‘மதராஸி’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர், நடிகர்கள், நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர். ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த இந்த விழாவில், நடிகர் சிவகார்த்திகேயன் உரையாற்றியபோது பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துகொண்டார்.

தனது உரையில் அவர் கூறியதாவது:“விஜய் சார் உடன் நான் நடித்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் சிலர், ‘இவர் குட்டி தளபதி, திடீர் தளபதி ஆகிறாரே’ என்று கிண்டல் செய்தார்கள்.

விஜய் சார் அப்படி நினைத்திருந்தால் துப்பாக்கி படத்தில் அவர் என்னிடம் ரோலை கொடுத்திருக்க மாட்டார், நானும் அதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன்.

சிலர், ‘நான் விஜய் சார் ரசிகர்களை பிடிக்க முயற்சி செய்கிறேன்’ என்கிறார்கள். ஆனால் ரசிகர்களை யாராலும் பிடிக்க முடியாது. ரசிகர்கள் என்பது ஒரு பவர்.எப்போதும் அண்ணன் அண்ணன்தான்… தம்பி தம்பிதான்.” என்று ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றார்.

மேலும் அவர் தொடர்ந்தும்,“ஒரு படம் நன்றாக இருந்தால், எனக்கு பிடித்திருந்தால் அந்த படக்குழுவை அழைத்து பாராட்டுவேன். ஆனால் அப்போ சிலர், ‘இவனேன்னா அவ்வளோ பெரிய ஆளா?’ என்று கேட்கிறார்கள்.நல்லது செய்வதற்கு நான் ஏன் யோசிக்க வேண்டும்? நான் நம்புகிற வழியில் தான் நடப்பேன்.” என்று உறுதியாக தெரிவித்தார்.

சிவகார்த்திகேயனின் உரை, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ‘மதராஸி’ படம், முருகதாஸ் – சிவகார்த்திகேயன் இணைப்பில் வெளியாகும் முதல் படமென்பதால், படம் எப்படி அமையும் என்பதில் ரசிகர்களிடம் பரவலான ஆவல் உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I am not a petty commander I am not a sudden commander Brother is brother Brother is brother Sivakarthikeyan spoke about Vijay


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->