விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை எப்படி செய்வது?
lozhukattai recepie
தேவையான பொருட்கள்
சூடு தண்ணீர்
அரிசி மாவு
உப்பு
பூரணம் இனிப்பு
தேங்காய் எண்ணெய்
நெய் மற்றும் ஏலக்காய்
குறிப்புகள்:-
முதலில் அரிசி மாவில் தேங்காய் எண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிடவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைக்கவும்.
இந்தத் தண்ணீரை கலந்து வைத்துள்ள மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசைந்து சப்பாத்திமாவு பதத்திற்கு வந்தவுடன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
இதையடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பை வேக வைத்து அதனை இடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு வெல்லம் சேர்த்து பாகுபோல் காச்சி அதனை இடித்து வைத்துள்ள கடலை பருப்பில் போட்டு கிளற வேண்டும். இதிலத்தேவையான அளவு நெய் மற்றும் ஏலக்காய் செய்து கெட்டியாக வந்தவுடன் இதையும் உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
பின்னர் அரிசி மாவு உருண்டைகளை எடுத்து அதனை இலையில் ரவுண்டாக தட்டி அதில் பூரணத்தை வைத்து மடக்கி வைத்துக் கொள்ளவும். இப்போது அனைத்து கொழுக்கட்டைகளையும் இட்லி பானையில் வேகவைத்தால் அருமையான கொழுக்கட்டைகள் ரெடி.