60 ஆண்டு சேவை முடிவு: இந்திய விமானப்படையில் இருந்து விடைபெறும் மிக்-21 போர் விமானம்..! - Seithipunal
Seithipunal


60 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்த மிக்-21 போர் விமானங்களின் சேவை விமானப்படையின் முக்கிய சக்தியாக விளங்கியாது. குறித்த விமானங்களின் சேவை வரும் செப்டம்பர் 26-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையில், ரபேல், சுகோய், மிக், மிராஜ், தேஜஸ் போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் சோவியத் யூனியனில் தயாரிக்கப்பட்ட மிக் 21 ரக போர் விமானங்கள், 60 ஆண்டுகளாக இந்திய விமானப்படையின் பயன்பாட்டில் உள்ளன. தற்போது, நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட புதிய விமானங்களை பயன்படுத்த இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது. இதையடுத்து, பழைய மாடல் விமானங்களுக்கு ஓய்வு தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மிக் 21 ரக விமானங்களின் சேவை வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பிகானிரில் நடந்த நிகழ்ச்சியில், அந்த ரக விமானத்தில் பறந்து தன் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.குறித்த நிகழ்ச்சியில் மிக்-21 போர் விமானங்களின் சாகசம் நடந்தது. அதை தொடர்ந்து ஏ.பி சிங் மேலும் கூறியதாவது: 

1960-களில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து மிக்-21 இந்திய விமானப்படையின் பணிக்குதிரையாக இருந்து வருகிறது. நாங்கள் இன்னும் அதைத் தொடர்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இது வரலாற்றில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் சூப்பர்சோனிக் போர் விமானங்களில் ஒன்றாக இருந்தது என்றும், 11,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் 60க்கும் மேற்பட்ட நாடுகளால் இயக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பறப்பதற்கு இது ஒரு அற்புதமான விமானம் என்றும்,  மிகவும் சுறுசுறுப்பானது மற்றும் கையாளக்கூடியது என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது தேஜாஸ் மற்றும் ரபேல் போன்ற புதிய தளங்களுக்கு செல்ல வேண்டிய நேரம் என்பதால், அதன் பழைய தொழில்நுட்பத்திற்கு சற்று ஒய்வு அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடுத்த மாதம் போர் விமானங்கள் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதற்கு முன்னதாக நடைபெறும் உணர்ச்சிபூர்வமான தருணத்தை இன்று அனுபவித்தேன் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 26-இல் சண்டிகரில், மிக்-21 போர் விமானம் விடைபெறும் விழா நடைபெறவுள்ளதாக ஏ.பி சிங் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MiG 21 fighter jet bids farewell after 60 years of service in the Indian Air Force


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->