உலக ஐயப்ப மாநாடு : 'கலந்துகொள்ள முடியாத சூழல்' என கேரள முதல்வருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
Tamil Nadu Chief Minister MK Stalin writes to Kerala Chief Minister stating that he cannot attend the World Ayyappa Conference
உலக ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத காரணம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். 'முன்னரே முடிவு செய்த நிகழ்ச்சியால் உலக ஐயப்ப சங்கமத்தில் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை' என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கேரள அமைச்சர் வாசவன் உலக ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
கேரளா மாநிலம், பம்பையில் வரும் 20.09.2025 அன்று திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழா நிகழ்ச்சியான "லோக அய்யப்ப சங்கமம்” நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இதில், கலந்து கொள்ளுமாறு கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளா மாநில துறைமுகம், தேவசம், கூட்டுறவுத் துறை அமைச்சர் வி.என். வாசவன் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் வாயிலாக கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு கேரளா பாஜக கடும் எதிர்ப்பும் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா மாநில முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முன்னரே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழாவில் தான் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது.
இந்த விழாவில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Tamil Nadu Chief Minister MK Stalin writes to Kerala Chief Minister stating that he cannot attend the World Ayyappa Conference