'மானத் தமிழர்கள் எல்லாம் மறக்காமல் கூடுவோம்' மரங்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ள சீமான்..!
Naam Tamilar Katchi leader seeman has called for the tree conference
எதிர்வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி சனிக்கிழமையன்று திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் 'மரங்களின் மாநாடு' நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வருமாறு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
'மரங்களோடு பேசுவோம். மரங்களுக்காகப் பேசுவோம். மனிதர்கள் இல்லாது மரங்கள் வாழும்; மரங்கள் இல்லாது மனிதர்கள் மட்டுமல்ல உலகில் எவ்வுயிரினமும் வாழ முடியாது. ஆகஸ்ட் 30ம் தேதி சனிக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கூட்டுச்சாலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் மாநாடு நடக்கிறது.
மானத்தமிழர்கள் எல்லாம் மறக்காமல் கூடுவோம். மரம் வளர்ப்போம். மழை பெறுவோம். வனம் செய்வோம். மரம் மண்ணின் வரம். வளர்ப்பதே மனிதர் அறம்.' என்று சீமான் கூறியுள்ளார்.
English Summary
Naam Tamilar Katchi leader seeman has called for the tree conference