நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்..பொதுமக்களுக்கு அழைப்பு!  - Seithipunal
Seithipunal


சென்னையில் 10 வார்டுகளில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்,காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நாளை (26.08.2025) திருவொற்றியூர் மண்டலம் சாத்தாங்காடு நெடுஞ்சாலையில் உள்ள தூய பவுல் மகாஜன மேல்நிலைப்பள்ளி, ராயபுரம் மண்டலம், வார்டு-53ல் வால்டாக்ஸ் சாலை, கொண்டித்தோப்பு காவல் குடியிருப்பில் உள்ள சென்னை மாநகராட்சி சமுதாயக்கூடம், திரு.வி.க.நகர் மண்டலம் , வார்டு-68ல் பெரியார் நகரில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபம், அம்பத்தூர் மண்டலம் ,வார்டு-90ல் 100 அடி சாலை, அவுஸ்திரேலியா எக்ஸ்டென்ஷன், கிரிஸ்டல் பேலஸ் எண் 1961சி, கே.எம். ராயல் மஹால் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

, இதேபோல அண்ணாநகர் மண்டலம் , வார்டு-96ல் வில்லிவாக்கம், பரசுராம ஈஸ்வர கோயில் தெருவில் உள்ள வெற்றி மஹால், தேனாம்பேட்டை மண்டலம் , வார்டு-119ல், இராயப்பேட்டை, பேகம் சாஹிப் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி சமுதாயக்கூடம், கோடம்பாக்கம் மண்டலம்,

வார்டு-133ல் தியாகராயநகர், சோமசுந்தரம் தெருவில் உள்ள சோமசுந்தரம் மைதானம், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-155ல், ராமாபுரம், ராயலா நகர் பிரதான சாலையில் உள்ள வள்ளி வடிவேலன் திருமண மண்டபம், அடையாறு மண்டலம் , வார்டு-176ல் வேளச்சேரி 100அடி சாலையில் உள்ள முருகன் திருமண மண்டபம், பெருங்குடி மண்டலம் , வார்டு-182ல் கந்தன் சாவடி, சி.பி.ஐ. காலனி, 2வது பிரதான சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி சமுதாயக்கூடம் ஆகிய 10 வார்டுகளில் நடைபெற உள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stalin with you project camp tomorrow Call to the public


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->