'ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை கைவிட்டால், லெபனானில் இருந்து வெளியேறுவோம்': பெஞ்சமின் நெதன்யாகு நிபந்தனை..! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையிலான போரில் ஹமாஸூக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை கைவிட்டால், இஸ்ரேல் ராணுவம் லெபனானில் இருந்து வெளியேறும் என பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பு ஆதரவாக செயல்படும், ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை கொடுத்து விட்டு சரணடைய வேண்டும் என கோரி, லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கென லெபனான் நாட்டின் ஒரு பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், ஹிஸ்புல்லாவை ஆயுதம் இல்லாத குழுவாக்க லெபனான் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையை லெபனான் ராணுவம் மேற்கொள்ளவும் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. குறித்த லெபனான் அமைச்சரவை முடிவை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுளதாவது:

ஹிஸ்புல்லா ஆயுதங்களை ஏந்தவில்லை என்று உறுதி செய்யப்பட்டால், இஸ்ரேல் ராணுவம் லெபனானில் இருந்து வெளியேறும் என்றும், இந்த முடிவு லெபனான் தனது இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இஸ்ரேலும் லெபனானும் ஒத்துழைப்பு உணர்வில் முன்னேற வேண்டிய நேரம் இ என்று பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஆனாலும், இஸ்ரேல் லெபனானில் உள்ள ஐந்து மலைப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israeli Prime Minister says he will withdraw from Lebanon if Hezbollah disarms


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->