மக்களே! மஞ்சள் காமாலை வருவதற்கு காரணம் இதுதான்... புரிஞ்சி நடந்துக்கோங்க!!!
This reason jaundice Understand and act
மஞ்சள் காமாலை ஏற்படக் காரணங்கள் :
வயதான ரத்த சிவப்பணுக்கள் மண்ணீரலில் (Spleen) அழிக்கப்படும் போது பிலிரூபின் என்ற நிறப்பொருள் உடலில் உற்பத்தி ஆகிறது.
இந்த பிலிரூபின் மலம், சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.
கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ, பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவுப்பொருளான பிலிரூபின் உடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால்தான் உடலில் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது.
மது அருந்துவதாலும், ஹெபடைட்டிஸ் கிருமிகள் கல்லீரலை தாக்குவதாலும் கூட மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.
வைரஸ் யு மற்றும் நு கிருமிகளால் ஏற்படும் மஞ்சள் காமாலை, அசுத்தமான நீரையும், ஈ மொய்த்த தின்பண்டங்களை உட்கொள்வதாலும் பரவுகிறது.

சாக்கடை நீர் கலந்த குடிநீர் மற்றும் அசுத்தமான நீரை குடிப்பவர்களுக்கும் இந்த ஆபத்து ஏற்படும்.
வைரஸ் டீ,ஊ,னு மற்றும் ஹபு’ வகை கிருமிகள் ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது, அதாவது பலமுறை பலருக்கு பயன்படுத்திய ஊசியை உபயோகப்படுத்தும் போது பரவுகிறது.
மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும் முறைகள் :
மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.
எந்த ஓர் உணவுப் பொருளைச் சாப்பிடுவதற்கு முன்பாகவும் சாப்பிட்ட பின்னரும் கண்டிப்பாகச் சுத்தமாகக் கைகளைக் கழுவ வேண்டும்.
சாக்கடை ஓரங்களில் உள்ள கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
காய்கறிகள், பழங்களை சுத்தமாகக் கழுவிய பிறகுதான் வெட்ட வேண்டும்.
கழிவறைக்கு அருகில் சமையல் பொருட்களை வைக்கக் கூடாது, சமைக்கவும் கூடாது. கழிவறையை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம்.
கழிவறையைப் பயன்படுத்திய பின், சிறுநீர் கழித்த பின், கைகளை கிருமி நாசினி பயன்படுத்தி நன்றாக கழுவ வேண்டும்.
நகம் வளர்க்கக் கூடாது. நகம் கடிக்கக் கூடாது.
நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். குறிப்பாக, காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
நண்பர்கள், உறவினர்கள் என பிரர், Nஷவிங் செட் போன்றவற்றையும் பயன்படுத்தக் கூடாது.
எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் சாப்பிடுவது மிக முக்கியம்.
இருப்பினும், மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.
English Summary
This reason jaundice Understand and act