இறந்தவரின் கைரேகையின் மூலம்  அவரின் செல்போனை அன்லாக் செய்ய முடியுமா.?! பதில் இதோ.! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டங்களில் கைரேகையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆதார் கார்டு மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றிற்கு முதன்மை அடையாளமாக கைரேகையை பயன்படுத்தப்பட்டு வருகிறது. செல்போன் போன்றவற்றிலும் ரகசிய குறியீடாக நாம் கைரேகையை பயன்படுத்தி வருகிறோம். இந்த தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் நமது தகவல்களை பாதுகாக்க இவை பயன்படுகின்றன.

நமது செல்போனில் இருக்கக்கூடிய  தகவல்களை கைரேகையின் மூலம்  குறியீடாக வைத்திருந்தால் நமது கைரேகை இல்லாமல் அவற்றை  செயலாக்கம் செய்வது கடினமான ஒன்றாகும். இதனால் ஒருவர் இறந்த பின்பு அவரது கை ரேகையை பயன்படுத்தி அவருடைய செல்போனையோ இல்லை ஏதேனும் ஒரு ரகசிய தகவல்களை தெரிந்து கொள்ள முடியுமா என பார்ப்போம்.

செல்போன்களில் இரண்டு விதமான  முறையில் கைரேகையானது ஸ்கேன் செய்யப்படுகிறது. முதலாவது    கண்டக்டிவ் டைப்,  இரண்டாவது அல்ட்ராசோனிக் ஸ்கேனர். இவ்வாறு இரண்டு வகைகளில் நமது கைரேகையானது செல்போன்களில் ஸ்கேன் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

ஒருவர் இறந்தவுடன் அவரது கைரேகையை பயன்படுத்தி  செல்போனை அன்லாக் செய்ய முடியும். ஆனால் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு பின் அவ்வாறு செய்ய இயலாது. ஒருவர் இறந்து குறிப்பிட்ட நேரமான பின்னர்  அவரது உடலின் ரத்த ஓட்டம் முற்றிலுமாக நின்று மின் கடத்தலும் நின்றுவிடும். இதனால் அவரது கைரேகையை பயன்படுத்தி அன்லாக் செய்ய இயலாது. இவ்வாறான முயற்சியை இறந்த ஒருவரின்  கைரேகையை பயன்படுத்தி 72 மணி நேரம் கழித்து  அவருடைய செல்போனை அன்லாக் செய்யும் முயற்சியில் தோல்வி அடைந்திருக்கின்றனர் அமெரிக்க காவல்துறை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

is it possible to unlock using their their finger print when they are dead


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->