வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்- இனி நம்பரை சேவ் பண்ணவே வேண்டாம்! - Seithipunal
Seithipunal


உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலியில் அடிக்கடி பல அப்டேட்களும், புதிய வசதிகளும் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அப்படி வாட்ஸ்அப்பில் அடுத்து புதிதாக வரவுள்ள வசதிகளை பற்றி தகவல் வெளியாகியுள்ளது. 

மொபைல் எண் சேமிக்கப்படாத பயனாளர்களுடன் கலந்துரையாடுவதை எளிமைப்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. பயனளர்களால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த வசதி இதில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மொபைலில் சேமிக்கப்படாத எண்களில் உள்ள, வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு கூட இனி நம்மால் ஈசியாக குறுந்தகவலை அனுப்ப முடியும். முன்னதாக, யாரேனும் ஒருவருக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும் என்றால், அவரது மொபைல் எண்ணை நாம் சேமித்து வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. தற்போது வாட்ஸ்அப் செயலியில் நியூ சாட் எனும் ஆப்ஷனை கிளிக் செய்து மேலே உள்ள சர்ச் ஆப்ஷனை கிளிக் செய்து, தொடர்புகொள்ள வேண்டிய நபரின் மொபைல் எண்ணை குறிப்பிட வேண்டும்.

அவ்வாறு செய்தால் அந்த எண்ணில் வாட்ஸ்அப் கணக்கு இருந்தால், அதனை பயனாளர் காணலாம். இந்த அப்டேட் பயனாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Introducing a new feature on WhatsApp No more saving the number


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->