அமெரிக்கா அரசின் தலையீடு குறித்து விவாதம் நடக்க வேண்டும்...! பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்
should debate US government intervention Rahul Gandhi letter to Prime Minister Modi
காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அறவே அழித்தது.

இந்த நடவடிக்கைக்கு இந்திய ராணுவம்,''ஆப்ரேஷன் சிந்தூர்'' எனப் பெயரிட்டது.இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
மேலும், நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா ஏன் தலையிடுகிறது என்று மத்திய அரசை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி, ''ஆப்ரேஷன் சிந்தூர்'' மற்றும் அமெரிக்க அரசின் தலையீடு ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் 'மல்லிகார்ஜுன கார்கே' மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் 'ராகுல் காந்தி' ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தக் கடிதம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
English Summary
should debate US government intervention Rahul Gandhi letter to Prime Minister Modi