இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை எதிரிகளுக்கு எச்சரிக்கையாக அமையும்..!- ராஜ்நாத் சிங்
India Brahmos missile will serve as a warning to enemies Rajnath Singh
காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அறவே அழித்தது. இந்த நடிவடிக்கைக்கு இந்திய ராணுவம்,'ஆப்ரேசன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டது.

இதை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. இதுகுறித்து நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இந்த நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் 'ராஜ்நாத் சிங்', இன்று லக்னோவில் ''பிரம்மோஸ்'' ஏவுகணை உற்பத்தி பிரிவை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
ராஜ்நாத் சிங்:
இந்த நிகழ்ச்சியில் உரையாடிய ராஜ்நாத் சிங், "பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி தந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையகத்தையே இந்திய ராணுவம் தாக்கியது.பயங்கரவாதிகளின் இருப்பிடம் தகர்க்கப்படும் என்பதே இந்தியா உலகிற்கு சொன்ன பாடம்.
பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் இனி பாதுகாப்பற்றவையாக இருக்கும். இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமையும்" என்று தெரிவித்தார்.இது தற்போது இந்திய மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
English Summary
India Brahmos missile will serve as a warning to enemies Rajnath Singh