கூலி படத்தின் முதல் வார வசூல் எவ்வளவு தெரியுமா? - இதோ விவரம்.!!
coolie movie collection update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் கூலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தத் திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் உலகளவில் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.
முதல் வார இறுதியில் இந்தியாவில் 225.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தத் திரைப்படம் ரஜினிகாந்த் நடித்து அதிகம் வசூலித்த திரைப்படங்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் எந்திரன் 2.0 - 407 கோடி ரூபாயும், ஜெயிலர் - 348 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகளவில் கூலி திரைப்படம் 422.8 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
coolie movie collection update