300 மசூதிகள் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் மூலமாக மீண்டும் நிதி திரட்டும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்..! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு- காஸ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டத்தில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனை மீண்டும் கட்டமைப்பதற்காக 300 மசூதிகள் பெயரில், பகிரங்கமாக நிதி திரட்டும் நடவடிக்கையில் ஜெய்ஷ் -இ -முகமது பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நன்கொடைகள் மூலம் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக, இவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவியை தடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க ஜி-7 நாடுகளால் எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்துள்ளது. இதன்காரணமாக ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்புகளுக்கு சென்று கொண்டிருந்த நன்கொடைகள் முடங்கியுள்ளன.

தற்போது, எப்.ஏ.டி.எப்., அமைப்பின் நடவடிக்கையை தொடர்ந்தும் 'ஈஸி பைசா', 'சதாபே' போன்ற டிஜிட்டல் செயலிகள் மூலம் ஜெய்ஷ் -இ -முகமது பயங்கரவாத அமைப்பு நன்கொடை வசூலித்து வருவதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistani terrorists are again raising funds through social media in the name of 300 mosques


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->