'காங்கிரஸில் இருக்கும் இளம் தலைவர்கள் திறமையானவர்கள்': பிரதமர் மோடி புகழாரம்..!
PM praises young leaders in Congress as talented
காங்கிரசில் இருக்கும் இளம் தலைவர்கள் திறமையானவர்கள். ஆனால், அவர்களுக்கு பாராளுமன்றத்தில் பேச வாய்ப்பு தருவதில்லை என பிரதமர் மோடிகுறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 21-ஆம் தேதி மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடர், தொடங்கியநிலையில், நேற்று முடிவடைந்தது. இக் கூட்டத்தொடரில் பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, ஆப்பரேஷன் சிந்துார் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பியது. இதனால், இரு சபைகளிலும் பெரும்பாலும் அமளியே நிலவிய நிலையில்,சபை நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளையொட்டி, தே.ஜ., கூட்டணி தலைவர்களுக்கு பிரதமர் மோடி தேநீர் விருந்து அழைப்பு விடுத்தார். அப்போது எதிர்க்கட்சியில் இருக்கும் இளம் தலைவர்களை பிரதமர் மோடி பாராட்டி பேசியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சில இளம் தலைவர்கள் திறமையானவர்கள், இதனால் தன் பதவிக்கு எங்கே பாதகம் ஏற்பட்டு விடுமோ என ராகுல் அச்சத்தில் இருப்பதாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெரும்பாலான நாட்கள் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன என்றும், இருந்தாலும் முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதில் தனக்கு திருப்தி ஏற்பட்டிருப்பதாகவும் தே.ஜ., கூட்டணி தலைவர்களிடம் பிரதமர் மோடி கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தேநீர் விருந்தில் கூட்டணி கட்சியினருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
PM praises young leaders in Congress as talented